டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Filed under: இந்தியா |

தலைநகர் டில்லியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை முதல் தளத்தில் உள்ள வகுப்பிலிருந்து ஆசிரியை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தார். இச்சம்பவத்தில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியையை கைது செய்து அவர் மீது கொலை கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். வகுப்பறையில் என்ன நடந்தது? ஏன் மாணவியை ஆசிரியை தூக்கியெறிந்தார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.