புதுடில்லி அரசு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்னை பெரிதாகவே உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. குளிர்காலத்தில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டும் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபடுவதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.