யானையை அடுத்து பசுவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் – சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Filed under: இந்தியா |

கேரளாவில் பசிக்காக உணவை தேடி வந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொடுத்தில் யானை இறந்துவிட்டது. இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இமாச்சலபிரதேசத்தில் ஒரு பசுவிற்கு உணவில் வெடிகுண்டு வைத்து கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜன்துட்டா பகுதியில் கோதுமை மாவில் வெடிகுண்டை வைத்து உருட்டி கொடுத்ததில் பசுவின் வாய் வெடித்து சிதைந்தது. பக்கத்துக்கு வீட்டுகாரரின் பயிரில் பசு மேய்ந்ததால் இதனை செய்தனர் என பசுவின் உரிமையாளர் கூறியுள்ளார்.

https://twitter.com/Raachi_J/status/1269276068948725765?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1269276068948725765&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftrend%2Fhimachal-pradesh-pregnant-cow-injured-trending-social-media-cowlivesmatter-hashtag-skv-301441.html

இதனால், அப்பகுதி காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். பின்பு காயம் அடைந்த பசுவின் நிலைமையை வீடியோ எடுத்து வெளியிட்டார் பசுவின் உரிமையாளர் குர்தியால் சிங். அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்துக்கு #JusticeforNandini என ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த கொடூர சம்பவத்துக்கு சமூக வளைத்தளத்தில் கொந்தளித்து பல பதிவுகளை பதிவு செய்யும் நெட்டிசன்கள்.