டிவிஎஸ் நிறுவனம் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது.
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன், மிக்ஜாம் புயல் தீவிரத்தால் சென்னையில் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கப்படுள்ளன. சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர், போலீசார், தன்னார்வலர்கள் மீட்டனர். தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. முதலமைச்சரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் அளிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினார். நேற்று ஹோண்டா நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியது.