டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர்… உடனடியாக ஆக்ஷன் எடுத்த முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் !
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்ட உதவியை அடுத்து முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன். மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பறாங்க… வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவவும்’ என்று பதிவிட்டு அதில் தமிழக முதல்வரின் டிவிட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார்.
இதைப்பார்த்து உடனடியாக ‘கவலை வேண்டாம் தம்பி, விஜயபாஸ்கருக்கும், சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷுக்கும் டெக் செய்து, அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன்’ என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷை டேக் செய்தார்.
அடுத்த சில மணிகளில் பீலா ராஜேஷ் ‘அவரிடம் பேசிவிட்டேன். அவர் கடலூரில் இருக்கிறார். உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திறோம் .’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.