கொரோனா அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து வைரஸ் பரவாது – மத்திய சுகாதாரத் துறை தகவல்!

Filed under: இந்தியா |

அறிகுறி இல்லாதவர்கள், காய்ச்சல் இல்லாதவர்கள் குறைவான அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறைவான அறிகுறி இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு பரிசோதனை செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

அறிகுறிகள் இருந்த பின்னர் 10 நாட்கள் கழித்து, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் ஏற்படவில்லை எனில் பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்தலும், அவர்களை வீட்டில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என திருத்தப்பட்ட புதிய தகவலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த நபர்களிடமிருந்து 10 நாட்கள் ஆகியும், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார இணை செயலாளர் லாவ் அகர்வால் விளக்கம் கொடுத்துள்ளார்.