தக்காளியின் விலை பாதியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூபாய் 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை திடீரென 60 ரூபாய் வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று தக்காளி விலை 30 முதல் 35 ரூபாய் என விற்று வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை இன்னும் குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.