“தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

Filed under: சினிமா |

“தக் லைஃப்” என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம். சமீபத்தில் திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது.

இத்திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் இதுவரை கமல்ஹாசனோடு இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.