தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய முழு விவரங்கள் விற்பனை என்ற முறைகேடு தற்போது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரோக்கர்கள் மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களின் மொபைல் எண்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த மொபைல் எண்களை பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியில் சேரும்படி அழைப்பு விடுத்த ஒரு முறைகேடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் விவரங்கள் தனியார் கல்லூரியின் கைக்கு சென்றது எப்படி என்பது குறித்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. தரவரிசை மதிப்பெண்கள் மற்றும் மொபைல் எண்களுடன் புரோக்கர்கள் மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விற்பனையாகியுள்ளது. முறைகேடாக பணம் கொடுத்து மாணவர்களின் விவரங்களை தனியார் பொறியியல் கல்லூரிகள் பெற்றுள்ள முறைகேடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர்களை சேர்ப்பதற்காக அவர்களுடைய மொபைல் எண்கள் உட்பட மற்ற விவரங்களை காசு கொடுத்து வாங்கி அந்த மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து வந்துள்ளது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.