பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் – அமைச்சர் செங்கோட்டையன்!

Filed under: தமிழகம் |

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன் பின்பு பள்ளி, கல்லூரிகளில் திறப்பதை பற்றி அந்தந்த மாநில அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நிருபர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்; பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முடிவெடுப்பார் எனவும் பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எட்டு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியை கொண்டு தயார்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.