தனியார் நிறுவன மோசடி: 5,000 பேர் மீது வழக்குப் பதிவு!

Filed under: தமிழகம் |

வாட்ஸப் செயலி மூலம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக ஒன்று சேர்த்து நேற்று கூட்டம் கூட்டினர். இதுதொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கூறி பல்லாயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19ம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி கோயம்புத்தூர், நீலாம்பூர் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேரை வலுக்கட்டாயமாக வாட்ஸ் ஆப் மூலம் திரட்டி இக்கூட்டம் கூடியதாக தகவல் வெளியானது. மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டதாக 5ஆயிரம் பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல், உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.