நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகிறது. படத்தை ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் சன் நெக்ஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகும் படக்குழு வட்டாரம் கூறுகிறது.