காலையில் அனைவரின் காதினிலும் விழுந்த மிகவும் சோகமான செய்தியே ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து.
இந்த கோர விபத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி ன்சுமார் 288 பேர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மீட்புப்பணியினர் தொடர்ந்து துரிதமாக செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து மீட்புப் பணியில் தமிழ்நாட்டுக் குழு, விபத்துக்குள்ளானோர் குறித்து தகவல்களை அறிய : 044-28593990 / 9445869843 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.