கோவை, ஜூன் 1
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று தமிழக அரசு பொதுமக்களிடம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், ஆகியவற்றில் கூட்டு வழிபாடு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தாலும் தமிழக அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தான்தோன்றித்தனமாகவும் படு முட்டாள் தனமாகவும் சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஏராளமானவர்களை வரவழைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பால் சர்ச் பாதிரியார் வில்சன் குமார் மற்றும் அவருடன் இருந்த குமரன் ரோட்டை சேர்ந்த வில்சன், ரயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த மனோ, அவிநாசி ரோட்டை சேர்ந்த செல்வகுமார், புதுநகர் காலனியை சேர்ந்த பிரேம்குமார், காலேஜ் ரோட்டை சேர்ந்த குணசேகர், ராக்கியபாளையம் பிரிவை சேர்ந்த டேவிட் ஜேசுபாலன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் வடக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 1391 இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188 269 வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார்.
இத்தகவல் நமக்கு கிடைக்கவே உடனடியாக விசாரணையில் இறங்கி விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் நமக்கு கிடைத்தன. கோயம்புத்தூர் சி.எஸ்.ஐ. டாயோசீசனின் பிஷப் திமோத்தி ரவிந்தர் கட்டுப்பாட்டில் திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. சென்ட் பால் சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் வில்சன் குமார் இங்கு வருவதற்கு முன்பு கோவை, மேட்டுப்பாளையம், என்று வலம் வந்த இவர் தற்போது திருப்பூர் சி.எஸ்.ஐ. பால் சர்ச்சில் பாதிரியாராக ஊழியம் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு குவாட்டர் கோவிந்தனாக வலம் வந்த இவர், குடியும் குடித்தனமாக பல நீதிபோதனை கதைகளைச் சொல்லி பல அதிசயங்களையும் அற்புதங்களையும் சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு வரும் விசுவாசிகளிடம் போதிப்பார். கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பாதிரியார் வில்சன் குமாருக்கு மாதாந்திரப் ஊதியமாக ரூபாய் 30,000 கொடுத்தாலும் இவரது உதிரி வருமானம் மாதம் 1.50 லட்சத்தை எப்படியாவது கல்யாணம், கருமாதி, அந்த பிரதிஷ்டை, இந்த பிரதிஷ்டை, என்று தன்னை தேடி வரும் விசுவாசிகளிடம் கல்லா கட்டி விடுவாராம்.
பணத்துக்காக படு கேவலமாக நடந்து கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கூட கண்டுகொள்ளாமல் பாதிரியார் வில்சன் குமாரின் சுய தேவைக்காக விசுவாசிகளை தேவாலயத்திற்குள் வரச்சொல்லி கூட்டு பிரார்த்தனை என்ற பெயரில் சட்டவிரோதமாக செயல்பட்ட போதுதான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவருடன் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் வில்சன் குமாருக்கு அல்லக்கையாக செயல்படுபவர் உப்புகாரன் என்ற புண்ணியவான் இருக்கிறான் அவனையும் சேர்த்து விசாரித்து எழுதுங்களேன் என்று நம்மிடத்தில் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்கள் சி.எஸ்.ஐ. பால் சர்ச் விசுவாசிகள் சிலர்.
ஒரு காலத்தில் பால் சர்ச்சில் உப்புகாரன் ஆடாத ஆட்டமும் இல்லை, போடாத கூத்தும் இல்லை, அந்தளவுக்கு நல்லவனை போல் இருப்பானாம் பரம சண்டாளன் என்பதைப்போல் உப்புகாரன் இந்த சர்ச்சில் எந்த அளவுக்கு சுருட்டு முடியுமோ அந்த அளவுக்கு சுருட்டிக்கொண்டு சத்தமில்லாமல் ஒதுங்கி கொண்டானாம். தற்போது பாதிரியாராக இருக்கும் வில்சன் குமார் அந்த மாதிரியான விஷயத்தில் படு வீக்கான பார்ட்டி என்பதால், வில்சன் குமாரை வியாபார குடும்பத்தில் பார்ட்னராக உப்பு காரன் சேர்த்து விட்டாராம். அன்று முதல் இன்று வரை வில்சன் குமார் வீட்டிற்கு அனைத்து மளிகை சாமான்களும் இலவசமக டோர் டெலிவரி செய்யப்படுகிறதாம். இலவசமாக தனக்கு கிடைக்கும் மளிகை சாமான்களை வில்சன் குமார் என்ன செய்வார் தெரியுமா.? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு எரிந்ததை போல் தனக்கு வேண்டப்பட்ட ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு தானமாக வழங்குகிறாராம் என்று நமக்கு செய்தி ஒளிபரப்பு செய்கிறார்கள் பால் சர்ச் விசுவாசிகள்.
திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பால் சர்ச்சில் அத்துமீறி சட்டவிரோதமாக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடும் பாதிரியார் வில்சன் குமாரை பற்றி திருப்பூர் மாநகர காவல் துறையில் உதவி ஆணையராக பணிபுரியும் நேர்மையான அதிகாரியான வெற்றிவேந்தன் கவனத்திற்கு இத்தகவல் சென்றது. உடனடியாக ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டார். போனவாரம் 60 பேர், இந்த வாரம் 37 பேர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தகவல் வந்தது. உடனே தக்க நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் அதிரடியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை குமார் நகரில் உள்ள சிஎஸ்ஐ பால் சர்ச்சில் அதிரடியாக நுழைந்து கூட்டுப் பிரார்த்தனையில் இருந்த பாதிரியார் வில்சன் குமார் மற்றும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் மற்றும் சில பேர் மீது வழக்குப் பதிவு செய்தது திருப்பூரில் சலசலப்பை ஏற்படுத்தியது அத்துடன் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. கோவை சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் திமோதி ரவீந்தர் தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டு தனது சுய தேவைக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு கல்லா கட்ட நினைத்த பாதிரியார் வில்சன் குமார் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவரது வெள்ளை அங்கியை கழற்ற வேண்டும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் சில நேர்மையான பாதிரியார்கள். அதே நேரத்தில் என் கடமை பணி செய்து கிடப்பதே என்று சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நேர்மையான காவல்துறை உதவி ஆணையர் வெற்றிவேந்தன் அவர்களுக்கு ஒரு சபாஷ்.