தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என்ற தகவலையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.