இந்திய அரசியல் புதிய வாழ்க்கையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளது. மதசார்பற்ற போர்வையில் குளிர்காய்ந்து அரசியல் நடத்தி இந்திய தாய்க்கு அடிமை விலங்கிட்ட சுயநல அரசியல்வாதிகளை இந்திய மக்கள் விரட்டிய 3வது சுதந்திர போர் நடைபெற்று உள்ளது. இந்திய உணர்வு உள்ள பிரதமர் பதவி ஏற்றது இந்திய தாய்க்கு மக்கள் அளித்த நன்றிக்கடன். வாஜ்பாய் ஆட்சி இந்தியாவின் பொற்காலமாக திகழ்ந்தது. அப்போது இந்தியாவை திட்டமிட்டு அடிமைப்படுத்த தீட்டிய சதியில் சிக்கிய பா.ஜ.க. அரசியல்வாதிகள், தற்போதும் இந்த ஆட்சியில் கலந்து உள்ளதாகக் குறிப்பிடுகிறார்களாம்.
அமெரிக்கா சீனாவிற்கு கடும் எச்சரிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடுநிலை வகிக்கும் தற்போதைய இந்தியாவிற்கு நல்லது என்கிறார்கள். அரசியல் ஆடிக்காற்றில், இலங்கை அதிபர் தவிக்கிறாராம். புரட்சித்தலைவியின் உதவி இன்றி மோடி ஆட்சி செய்வது கடினம் என்ற அரசியல் கருத்து உள்ளது. தமிழக கடலோர காவல் பலப்படுத்தப்பட்டாலும் இந்திய காவல் படகுகள் அதிக ரோந்து பணியை செய்தாலும் இலங்கை தனிமைப்படுத்தப்படும். இதனால் இலங்கை அதிபரின் தமிழ் எதிர்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.
கடந்த ஆட்சியில் இலங்கைக்கு கால்பிடித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தமிழக அறிவாளிகள் தற்போது கை, கால்களை கட்டிக்கொண்டு வாய் பொத்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அரசியல்வெற்றி இலங்கைக்கு வைக்கப்படும் முதல் ஆப்பு. நரேந்திரமோடி பிரதமர் ஆனதால் தமிழ் உணர்வுகள் காக்கப்படுமா என்ற பட்டிமன்றம் பாராளுமன்றத்தில் நடக்கிறது. தெலுங்கு பேசும் அரசியல்வாதிகள் தமிழக பா.ஜ.க.வை மேற்பார்வை இடுவதுடன், அதிக ஆதிக்க உணர்வுகள் உடையவராக இருக்கிறார்களாம். இவர்களுக்கு தமிழக உணர்வுகள், கலாச்சாரம் அதிகம் தெரிய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
மேலும் தமிழக பா.ஜ.க.வில் அந்தணர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், மற்ற சாதியினர் அதிகம் ஊக்குவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாடடு அதிகம் எழுந்துள்ளதாம். நரேந்திரமோடியை முன்நிறுத்தி, தமிழக பா.ஜ.க. அரசியல் செய்யாமல், ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமிழகத்தில் பா.ஜ.க. வளரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் தமிழ் பேசும் தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழக பா.ஜ.க.வில் தேசிய அளவில் ஊக்குவிக்க முயற்சி செய்யவேண்டும் என்ற கருத்து உலவுகிறதாம்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டார்களாம். ஆனால் தமிழ்த்தாய் நீதிதேவன் வடிவில் தமிழக முதல்வருக்கு ஆசி வழங்கினாள். தற்போது ஆந்திரம், குஜராத் அரசியல்வாதிகள் ஆதிக்கம் தொடரும் என்ற கருத்து உலவுகிறது. ஆந்திர அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்கமுற்பட்டால், தமிழ் பேசும் தமிழக மக்கள் அவர்களை அரசியல் உலகத்திலிருந்து அப்புறப்படுத்தும் நிகழ்ச்சி நடக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.