நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி – அச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள்!

Filed under: தமிழகம் |

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் இரு மருத்துவர்கள், திருவெண்காடு பல் மருத்துவர் ஒருவர் மற்றும் பெண் மருத்துவர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் கொரோனாவால் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு செவிலியருக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாகப்பட்டினத்தில் இதுவரை 250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.