தமிழர்களுக்கு தித்திப்பான செய்தியை அறிவித்த மோடி. !பிரதமரால் நெகிழ்ச்சி. !
உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தமிழர் இன வரலாற்றில் தமிழினம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தை ஒன்றாம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நமது இந்திய பிரதமர் மோடி டிவிட்டரில் தனது பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்து இருக்கின்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ” தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் “என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.” அதில் கூறியுள்ளார்.