மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு – பிரதமர் மோடி வரவேற்பு!

Filed under: இந்தியா |

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் முக்கிய அறிவிப்புக சிலவற்றை வெளியிட்டார்.

இதற்கு பிரதமர் மோடி நிர்மலா சீதாராமன் அறிவித்த அறிவிப்புகளுக்கு வரவேற்றுள்ளார். மேலும் இதனை பற்றி பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.