தமிழில் டப்பாகும் ‘ப்ரமயுகம்’!

Filed under: சினிமா |

மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் “பிரமயுகம்” திரைப்படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையிலேயே கூட இந்த படம் ரசிகர்களால் பெரியளவில் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. இதனால் இந்த படம் தமிழில் டப் ஆகி நாளை முதல் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.