ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் பேய் மழை கொட்டி, ஜம்மு காஷ்மீர் பகுதியை சுத்தமாக பாகிஸ்தானிலிருந்து பிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இறைவன் பெயரால் தீவிரவாதம் நடத்தி, அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கு இறைவன் கொடுத்த பரிசாக ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள். மொத்த மாநில மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு புது வாழ்க்கைக்கு வழிதெரியாமல் திணறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மதசார்பற்றத்தன்மையை வீதிதோறும் கூவிக்கூவி ஆதரவுகேட்ட மதசார்பற்ற இந்திய கட்சிகள் தற்போது வாய்மூடி திணறுகின்றன. இந்திய வீரர்களை எதிர்த்த தீவிரவாதிகளின் பல குடும்பங்கள் இந்திய ராணுவத்தால் காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
காஷ்மீர் வெள்ளத்தைக் கண்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள், தற்போது இறைவனின் கோபத்தைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இனி ராணுவம் மொத்த மாநிலத்திலும் சூழப்பட்டு, இந்திய பகுதிகள் பாதுகாக்கப்படலாம். இந்தியாவில் நுழைய பாகிஸ்தான் தீவிரவாதிகள், இனி காஷ்மீரத்தில் வசதி இல்லை என்று அடித்துக் கூறுகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய இந்திய துரோகிகள், தற்போது பித்துப்பிடித்து அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவு தந்த கட்சிகள், தற்போது காஷ்மீர் மக்களின் இந்திய உணர்ச்சியைக்கண்டு நடுங்குகிறார்கள். காரணம் ஒட்டுமொத்த முஸ்லீம், கிறிஸ்துவ மக்கள் இந்திய உணர்ச்சி கொப்பளிக்க எழுந்து நிற்கும் புரட்சி ஏற்பட்டுள்ளது. பாரதி கண்ட இந்திய உணர்ச்சிகள் இந்தியா முழுவதும் கொப்பளித்து நிற்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நரேந்திரமோடியின் 100 நாள் ஆட்சியை பலதரப்பில் விமர்சனம் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த மத்திய அரசு, இந்திய உணர்ச்சிகளை அடிமைப்படுத்த நமது எல்லைப்பகுதிகளை பலவீனமாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தனவாம். பதவி ஆசை பிடித்து சென்ற மத்திய அமைச்சர்கள், தங்களுக்கும் திறமையும், இந்திய பக்தி இருந்தும், அதிகார ஆசைக்கு இந்தியாவைப் பலி கொடுக்க உதவியதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் விளைவு சுண்டெலி நாடான இலங்கைகூட இந்தியாவை எதிர்த்தது. ஒரு கட்டத்தில் தமிழகத்தை இலங்கையுடன் இணைக்க சதிதிட்டம் தீட்டப்பட்டு, அதற்கு தமிழக அறிவாளிகள், மத்திய அரசுகு உதவியதாக வதந்திகள் பரவியது உண்டு என்கிறார்கள்.
இந்திய ராணுவ வீரர்கள் இந்திய உணர்ச்சியை அடக்க கட்டளை இடப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய எல்லைகள் வலிமை ஆக்கப்படுகிறது. இந்திய ராணுவம் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து உள்ளதாம். பிரதமர் அலுவலகம் பொம்மைபோல் செயல்படாமல் மிகவும் புத்திசாலித்தனமாக அறிவுப்பூர்வமாக செயல்படுகிறது. அதிக தமிழர்கள் பிரதமர் அலுவலகத்தில் இறையாண்மையுடன் தற்போது பணியாற்றுவதாக போற்றப்படுகிறார்கள்.
நரேந்திரமோடியின் புத்திசாலித்தனமான அரசியல், அத்வானி ஆதரவாளர்களை ஒதுக்கி வைத்துள்ளது. பா.ஜ.க. வளராத மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டாலும், அம்மாநில முதல்வர்களுடன் மோடியின் நட்பு அதிகரித்து உள்ளதாகக் கூறுகிறார்கள். நேர்மையான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்திய நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது.
இலங்கை அதிபரின் அரசியல் கனவு தற்போது தகர்க்கப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். காரணம் இலங்கை அரசியல் விதிப்படி, இனி அவர் மறுபடியும் இலங்கை அதிபர் தேர்தலில் நிற்கமுடியாது என்ற கருத்து உலவுகிறது. இதனால் தன் மகனுக்கு முடிசூட்ட விரும்பியதாகக் கூறுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தம்பி பொன் சேகா, அமைதியாக தந்திரமாக காய் நகர்த்துகிறாராம். இலங்கை புத்த பிட்சுக்களின் வெறித்தனமான செயல்கள் உலகை உலுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் புத்த பிட்சுக்களுக்கு ஆதரவு அளித்த இலங்கை அதிபர் தற்போது தயங்குகிறார்.
தமிழர்களின் பிரச்னை என்று கூறி, இலங்கை மக்களை ஏமாற்றிய இலங்கை அதிபர் தற்போது பிரதமர் மோடியுடன் கண்டிப்பு கவலைகொள்ள வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்திய அரசியல்வாதிகளையும், தமிழ் அறிவாளிகளையும் நம்பி மோசம்போன இலங்கை அதிபர் தற்போது உலக நாடுகளின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். இதனால் பயந்துபோன ராஜபக்சே, ராணுவ ஆட்சியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை எல்லைகளில் பாகிஸ்தான், சீன ராணுவ உதவியைக் கொண்டு தாக்கத்திட்டமிட்டு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. தமிழக முதல்வரின் இலங்கை எழுச்சி இந்திய அரசியல்வாதிகளை குறிப்பாக தமிழக அறிவாளிகளுக்கு காய்ச்சலை கொடுத்து உள்ளது. தமிழக முதல்வரை பதவி இறக்கம் செய்ய அ.தி.மு.க. துரோகிகளுடன் கை கோர்க்கும் படலம் நடந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். முதல்வரை சுற்றி உள்ள அதிகார வட்டத்தை நிதிகளால் பிளந்து, தனிமைப்படுத்தும் சதித்திட்டத்தை உலவ வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தலைநகரில் உலவுகிறது.
அகில இந்திய பா.ஜ. கட்சியில் நரேந்திரமோடியின் அழுத்தமான எழுச்சி, அவரது எதிர்ப்பாளர்களுக்கு அச்சத்தை கொடுத்து உள்ளதாம். வெறிபிடித்த இந்துத்துவா உணர்வுகளை அடக்கி, மதச்சார்பற்றத்தன்மையை வெளிப்படுத்தும் நரேந்திரமோடிக்கு அதிக ஆதரவு வெளிப்பட்டு உள்ளது. இதனால் கவலை அடைந்த மோடி எதிர்ப்பாளர்கள். தற்போது தீவிர இந்திய மனப்பான்மையை உசுப்பிவிட்டுள்ளார்கள். இதனால் இந்து முன்னணியின் பல தீவிர தலைவர்கள் தமிழகம் உள்பட பா.ஜ.க.விற்கு எரிச்சல் அடையச்செய்யும் வண்ணம் உணர்ச்சி கொப்பளிக்க குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளார்களாம். இதனை புரிந்துகொண்ட பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தற்போது இந்துத்வா உணர்வுகளை கொண்டு நாடகமாடும் பா.ஜ.க. தலைவர்களை இனம் கண்டு விட்டதாகக் கூறப்படுகிறார்கள்.