தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு!

Filed under: அரசியல்,சென்னை |

தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் படையுடன் சாஸ்திரிபவனிலிருந்து புறப்பட்ட நிலையில் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தான் வருகிறார்கள் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அவர்கள் பிராட்வே பக்கம் சென்று நகைக்கடை அதிபர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.