காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
22 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டில்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை” என்று கூறியுள்ளார். இதையடுத்து அசோக் கெலாட், சசிதரூர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.