தளபதி பட வீடியோ லீக்!

Filed under: சினிமா |

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வாரிசு” படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது. சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இயக்குனர் வம்சி, படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.