தளபதி விஜய்க்கு சேலஞ்ச் கொடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – வைரல் வீடியோ!

Filed under: இந்தியா |

இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளுக்கு தென்னிந்திய திரை துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மகேஷ்பாபுவின் பிறந்த நாளில் அவருடைய வீட்டில் ஒரு செடியை நட்டு வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் பிறகு அவருடைய ட்விட்டர் பதிவில் இந்த சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய், ஸ்ருதிஹாசன் ஆகிய மூவருக்கும் கொடுத்துள்ளார்.

மேலும், என்னுடைய பிறந்த நாளை இதை விட மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது எனவும் இந்தியா முழுவதும் பசுமையாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இந்த சேலஞ்சை ஏற்று தளபதி விஜய் அவருடைய வீட்டில் செடியை நடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.