நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பது நமக்கு தெரிந்ததே.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே அவர் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது
’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடக்கும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது
வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



