மத்திய அரசு பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருதுதை அறிவித்துள்ளது.
திரைத்துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், லதா மங்கேஷ்கர், கே.விஸ்வநாத், ரஜினிகாந்த் உட்பட பலருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1970களில் முன்னணி நடிகையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ஆஷா பரேக் என்பவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை ஆஷா பரேக்கிற்கு பலதரப்பட்டவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.