காலம் காலமாக ரயில்கள் புறப்படும் நேரம் தாமதமாக புறப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராஜ்தானி சதாப்தி மற்றும் தூரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற ரயில்வே விதிகளில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக வழங்கப்படும் உணவு சிற்றுண்டியா அல்லது மதிய உணவா என்பதை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இனி ரயில்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக சென்றால் பயணிகள் தங்களுக்குரிய இலவச உணவை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.