சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.
திடீரென அவர் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகானுக்கு தெரிந்த அரசியல் கட்சி பிரபலம் ஒருவர் வேறு கட்சியிலிருந்து போட்டியிடுவதால் தான் அவர் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது