ஆளுனரே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்லிவிட்டார், அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவி நேற்று அளித்த பேட்டி ஒன்றில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து இருந்தார். இக்குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியுள்ளார். எனவே 356ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.