தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை – பொது சுகாதாரத் துறை தகவல்!

Filed under: தமிழகம் |

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உடல்நிலை பிரச்சனையால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் சண்முகத்தை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாகவும் தகவல் கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர் சிவி சண்முகத்திற்கு 18ஆம் தேதி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் முடிவுகள் 19ஆம் தேதி வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.