குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் பாஜகவில் இணையபோவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜகவினர் முடித்து விட்டதாகவும் விரைவில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறானது என்றும், திமுக எம்எல்ஏக்கள் பெயர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக திமுக எம்எல்ஏக்கள் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.