திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்!
சென்னை: திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்த்த கமலுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஒருவழியாக வழ வழ, கொழ கொழ திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டது. சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு
இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின்- கே.எஸ். அழகிரி முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக ஹேப்பி
தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய போது, காங்கிரஸ் கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வரை கோரியது. ஆனால், இதையெல்லாம் சைலண்ட்டாக கேட்ட திமுக, வெறும் 15 தொகுதியில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்க ஆடிப் போனது தமிழக காங்கிரஸ் தலைமை. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. ஒருக்கட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டே அழுதுவிட்டார். அப்படியிருந்தும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறாமல் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது.
கடும் அப்செட்டில் கமல்
இதில், காங்கிரஸுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமா கவலையில் இருக்கப் போவது கமல்ஹாசன் தான். மூன்றாவது அணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யம், நேற்று கூட, ‘காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தது. திமுகவுடன் காங்கிரஸ் மல்லுக்கட்டிக் கொண்டிருந்ததால், ஒருவேளை காங்கிரஸ் மனம் மாற கூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இன்று காட்சிகள் மாறிவிட்டன. இதனால், கமல்ஹாசன் ஏக அப்செட்டில் இருக்கிறாராம்.
கமல் ஆதங்கம்
அதேபோல், விசிக தங்களுடன் கூட்டு சேர வேண்டும் என்றும் கமல்ஹாசன் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த எண்ணத்திலும் மண் விழா, ‘என் தம்பி திருமாவளவன்’ அடுத்த தேர்தலில் என்னிடம் தான் வர வேண்டும் என்று மறைமுகமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை நாம் பார்க்க முடிந்தது.
நழுவிய டார்கெட்
வயது மூப்பு காரணமாக, இந்த 2021 தேர்தலிலேயே எப்படியாவது தனது பலத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று தேர்தல் களமாடும் கமல்ஹாசனின் விசிக, காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய டார்கெட்டும் கை நழுவ, கடும் அப்செட்டில் உள்ளாராம் ஆழ்வார்பேட்டை நம்மவர். (அதான், ஆண்டவர்-னு சொன்னா கோபப்படுறாங்களே!)