திமுக பிரபலத்தின் வைரல் பதிவு!

Filed under: அரசியல் |

திமுக பிரமுகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி உள்ளது.

கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது மேடைகளில் முழங்கி வரும் இச்சூழ்நிலையில், திமுக பிரமுகர் டி.ஆர்.பி.ராஜா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டதோடு, ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “1990ல் ஒரு மாணவியாக ஆயிரம் விளக்கில் மேடையேறி முழங்கினேன் இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன் என்று #முதலமைச்சர் @CMOTamilnadu முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு! ஒரு பெரிய வங்கியில் அவர் இன்று மேலாளர்!” என்று பதிவிட்டுள்ளார்.