ஸ்மோக் பிஸ்கட்டுகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் உள்ள ஸ்மோக் பிஸ்கட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது.
திரவ நைட்ரஜனை உணவுப் பொருளில் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் திடீரென உடல்நல கோளாறால் கதறிய வீடியோ வைரலானதை அடுத்து திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுந்தது. திரவ நைட்ரஜன் பயன்படுத்தி ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற உணவுப் பொருளை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிரை ஐஸ் கலந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கொடுக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நைட்ரஜன் பயன்படுத்தி ஏராளமான உணவு பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோதனை செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்