திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் கோவில் அதிகாரிகள் அசைவ உணவு உண்ணும் வீடியோ வைரலாகி உள்ளது.
திருத்தணி பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் இல்லம், தணிகை இல்லம் ஆகியவற்றில் கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலபேர் கோவில் குடியிருப்புகளில் தங்கியிருந்து விரதம் இருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற மறுநாள் சுவாமி தரிசனம் செய்வதும், மலைக்கோவிலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர். இந்நிலையில் கார்த்திகேயன் இல்லத்தில் அமர்ந்து கொண்டு திருத்தணி முருகன் கோவிலில் உயர் பதவியில் இருக்கக்கூடிய கலைவாணன், வித்யாசாகர் இருவரும் அசைவ உணவுகளை உட்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் தங்கும் அறையில் அதிகாரிகள் அமர்ந்து அசைவம் சாப்பிடுபவர்கள் மீது அறநிலைய அதிகாரிகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.