திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே!

Filed under: அரசியல் |

திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே!

சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

: சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் உதயநிதியை எதிர்த்து பாஜகவின் குஷ்பு போட்டியிட்டாலும் வெற்றி உதயநிதிக்கே கிடைக்கும் என்று ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். திருவல்லிக்கேணியில் சூரியனே உதிக்கும் தாமரை மலர வாய்ப்பில்லை ராஜா என்கின்றனர் ஒன் இந்தியா வாசகர்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக கட்சியினர் வேட்பாளர்கள் நேர்காணலை முடித்து விட்டனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


உதயநிதி விருப்பமனு

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி. பாஜகவில் இணைந்த குஷ்புவும் கடந்த சில மாதங்களாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முகாமிட்டு தேர்தலுக்கான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார்.


குஷ்புவின் சவால்

நான் போட்டியிடும் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சவால் விட்டிருந்தார் குஷ்பு. அந்த சவாலை ஏற்கும் வகையிலேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கான நேர்காணலிலும் பங்கேற்றுள்ளார்.


கோட்டையை தக்க வைக்குமா திமுக

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். திமுகவின் கோட்டையாக கருதப்படும் அந்த தொகுதியை குறி வைத்து களமிறங்கியுள்ளார் குஷ்பு. அதே நேரத்தில் தொகுதியை தக்க வைக்க களமிறங்கப்போகிறார் உதயநிதி.


உதயநிதி ஜெயிப்பார்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி, குஷ்பு போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வியுடன் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் கருத்துக்கணித்து நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் 11,985 பேர் வாக்களித்துள்ளனர். குஷ்பு ஜெயிப்பார் என்று 18.29 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். 2192 பேர் குஷ்புவுக்கு ஆதரவாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் உதயநிதி ஜெயிப்பார் என்று 71.26% சதவிகிதம் பேர் அதாவது 8541 பேர் கருத்து கூறியுள்ளனர்.


வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாரா?

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேறு யாராவது ஜெயிப்பார்கள் என்று 10.45 சதவிகிதம் பேர் அதாவது 1252 பேர் கூறியுள்ளனர். குஷ்பு சவால் விடாமல் இருந்திருந்தால் திமுக வேறு யாரையாவது போட்டியிட வைத்திருக்கும். சவால் விட்டதால் அதனை ஏற்று இப்போது உதயநிதி போட்டியிட தயாராகி விட்டார். இந்த சவாலில் யார் ஜெயிக்கிறார் என்று பார்க்கலாம்.