திருவிழாவில் நிகழ்ந்த அசம்பாவிதம்!

Filed under: சென்னை |

அரக்கோணத்தில் நடைபெற்ற திருவிழாவில் கிரேன் ஒன்று சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோண நெமிலியில் உள்ள கீழவீதி கிராமத்தின் மண்டியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவில் மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றபோது துரதிர்ஷடவசமாக கிரேன் சரிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோலாகலமாக தொடங்கிய திருவிழா உயிர்பலியில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.