பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டதை பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதியான ஷாப்பிங் பகுதியான தி.நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் எஸ்கலேட்டர், லிப்ட் போன்ற வசதிகளுடன் இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருவதை அடுத்து விரைவில் பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது. இதனால் ஏராளமான பயணிகள் மற்றும் தி.நகர் வரும் பெரும் மக்கள் பயனடைவார்கள். ரங்கநாதன் தெருவை இனிமேல் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு ராட்சத தூண்கள் எழுப்பப்பட்டு நடை மேம்பாலம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது விரைவில் இந்த பணிகள் முடிவடைய இருப்பதாகவும் இதில் லிப்ட் வசதியும் ஏற்படுத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.