தீவாக மாறிய ஒகேனக்கல்!

Filed under: இந்தியா,தமிழகம் |

காவிரியில் நீர்வரத்து 5 ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் தீவாக மாறியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்தது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் ஒகேனக்கல் காட்சி அளிப்பதாகவும், கரையோர வீடுகளை காவிரி நீர் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கர்நாடக அணைகளில் 2.3 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இன்று மாலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஓரத்திலுள்ள 75 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் இருபுறங்களிலும் தற்போது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.