பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!

Filed under: இந்தியா |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பிரச்சனை பெருமளவில் கிளம்பியுள்ளது. போதைப்பொருள் உபயோகப்படுத்தியது மற்றும் அவருடைய காதலர் சுஷாந்த்துக்காக பெற்றது என்ற குற்றங்களின் பேரில் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் அவருடைய ததம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்ளிட்ட பலரும் கைதாகினர்.

இதை அடுத்து சில திரைத்துறையினரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கதாநாயகிகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரதா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிக்கிய நடிகர், நடிகைகளுக்கும் போதை தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவித்தனர்.

இதை அடுத்து நேற்று ரகுல் பிரீத் சிங் விசாரணைக்காக ஆஜரானார். ரகுலிடம் நான்கு மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தற்போது இன்று நடிகை தீபிகா படுகோனே விசாரணைக்காக மும்பையில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். தீபிகாவிடம் ஆறு மணி நேரம் மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். .