துணைத்தலைவர் பதவியும் பறி போனதா?

Filed under: சென்னை |

அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமைக்கான ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியாருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தன்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரமில்லை என்று கூறி அதிமுக அலுவலகம் முன் ஓபிஎஸ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகமருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொருளாளர் பதவியைப் பறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பன்னீர் செல்வத்திடம் உள்ள எதிர்க்கட்சித்துணைத்தலைவர் பதவியைப் பறிக்கவுள்ளதாகவும் இதற்காக விரைவில் அதிமுக எம்.எல்.ஏக்கவின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றக் உள்ளதாகவும் இதற்காக நடவடிக்கை எடுக்க எஸ்.பில் வேலுமனியிடன் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக் காரணமாக அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் ஓபிஎஸ் தரப்பை வெளியேற்றி, வருவாய்த்துறையினர் உதவியோடு சீல் வைத்தனர்.