சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் பேசும் போது, “சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும், எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, நேர்மறை பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் மோதி வருகிறோம். கோயிலும், பக்தியும் அவரவர் உரிமை, துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைவரின் மீதும் அதிகார அத்துமீறல் செய்பவர்கள் பாஜகவினர், 1,000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி” என்று கூறினார்.