சென்னை, அக் 4:
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், பிக் பாஸ் சீசன் – 5 நேற்று கோலாகலமாக துவங்கியது.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா, நேற்று மாலை, 6 மணிக்கு துவங்கியது.
துவக்க விழாவில், இந்த சீசனில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் கமல்ஹாசனால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின், அவர்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தமாக, 18 போட்டியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. இசைவாணி (கானா பாடகி)
2. ராஜூ ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
3. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
4. அபிஷேக் ராஜன் (விமர்சகர்)
5. நமிதா மாரிமுத்து (மாடல் அழகி)
6. பிரியங்கா (தொகுப்பாளினி)
7. அபினய் (நடிகர்)
8. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
9. பவானி ரெட்டி (சின்னத்திரை நடிகை)
10. நதியா சங் ( (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
11. வருண் (நடிகர்)
12. இயக்கி பெர்ரி (ராப் பாடகி)
13. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
14. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
15. அக்சரா ரெட்டி (மாடல் அழகி)
16. தாமரை செல்வி (நாடக கலைஞர்)
17. சிபி சந்திரன் (நடிகர்)
18. நிரூப் நந்தகுமார் (நடிகர்)