அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்குகிறது – குஷியில் ரசிகர்கள்!

Filed under: சினிமா |

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மூன்று வருடமாக நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அடுத்த மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. சில வாரத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியது. இன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகம் இருப்பதால் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.