தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.
இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், முதுநிலை நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை; வரும் 21ம் தேதி கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்பு தங்களின் அதிகாரப்பூர்வ இணயதள பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.