உச்சநீதிமன்றம் நாளை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளிப்பதை சமீபத்தில் தடை செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தவர் விவரங்களை அளிக்கக் கோரி எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ கோரிக்கை விடுத்த நிலையில் நாளைக்குள் எஸ்பிஐ தேர்தல் பத்திர ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கறாராக சொல்லிவிட்டது. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “நரேந்திர மோடியின் ‘நன்கொடை வியாபாரம்’ அம்பலம்! சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டுத் தருவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது. ஊழல் தொழிலதிபர்கள் மற்றும் அரசாங்கத்தின் தொடர்பை அம்பலப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோடியின் உண்மையான முகத்தை நாட்டின் முன் வெளிப்படுத்தும் தேர்தல் பத்திரங்கள், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலை நிரூபிக்கப் போகிறது. காலவரிசை தெளிவாக உள்ளது.- நன்கொடை வியாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் நன்கொடை- பாதுகாப்பு அளிக்கிறோம் நன்கொடை அளிப்பவர்கள் மீது ஆசி மழை பொழிந்து பொது மக்கள் மீது வரிச்சுமை, இது பாஜகவின் மோடி அரசு” என்று பதிவிட்டுள்ளார்.