தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்திரா!

Filed under: இந்தியா |

பீகாரில் தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு ட்ராக்டர் பரிசாக அளித்தார் ஆனந்த் மகிந்திரா.

பீகாரில் உள்ள கயா மாவட்டத்தை சேர்ந்தவர் லாங்கி புய்யன். இவர் விவசாயி ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது ஒரு அற்புதமான ஒரு செய்யலை செய்துள்ளார்.

மலை பகுதியில் இருந்து மழை நீர் குளத்துக்கு வரும் விதமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தனி ஒருவராக கால்வாய் வெட்டி உள்ளார்.

அந்த விவசாயி 30 வருடங்களாக தனி மனிதனாக நின்று இந்த கால்வாய் வெட்டி உள்ளார். இந்த செயலுக்கு அவரை பெருமைப்படுத்தும் வகையில் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா ட்ராக்டரை பரிசாக கொடுத்து அசத்தினார். லாங்கி புய்யன் மிக மகிழ்ச்சி அடைந்தார்.