தொலைத் தொடர்பு சேவைத் துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.
இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும்.
இந்த நடவடிக்கையினால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20,000 கோடி குறையும் அதேவேளையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் ரூ.4000 கோடி குறையும்.
இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 4-வது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் உருவாகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரைசைக் கையகத்தில் 448 மெகா ஹெட்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த இணைந்த நிறுவனங்கள்.
இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65,000 கோடி, நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாக இருக்கும்.