நடிகரின் மனைவியிடம் கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை!

Filed under: சினிமா |

நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

‘எல்லாம் அவன் செயல்’, ’புலிவேஷம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.கே. பாலாவின் “அவன் இவன்” படத்தில் வில்லனாக நடித்த இவர் விஜய்யின் “ஜில்லா” விஷாலின் “பாயும்புலி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்கே மனைவி ராஜி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஆர்.கே. வீட்டு காவலரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவலாளி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.